தெய்வம் தந்த வீடு (1978)

- Country
- Sri Lanka

The catalogue in 3D
The film shelves have a room of their own that you can walk around in. The cat behind the counter is the AI Catbot, and they pick real films from the same catalogue when you tell them what you feel like watching. Nothing is for sale, here or in there. Go in from here and this film is already out on the counter, with more like it waiting on the shelf next to it.
How it feels
A nadaswaram musician falls in love with a dancer in Sri Lanka. The film was the country's first 70mm Tamil movie and follows their relationship.
romanticclassicallyricalearnesttraditionalmildsimplenostalgic
What happens
தெய்வம் தந்த வீடு (Deivam Thandha Veedu) 1978ல் திரையிடப்பட்ட இலங்கைத்திரைப்படமாகும். இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படமான "தெய்வம் தந்த வீடு" திரைப்படத்தை தயாரித்தவர் ஹட்டன் வி. கே. டி. பொன்னுசாமிப்பிள்ளை என்ற தொழிலதிபர். "தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் சாயலில் ஒரு நாதஸ்வரக்கலைஞனுக்கும், ஒரு நாட்டியக்கலைஞருக்கும் ஏற்படும் காதலை சித்தரிக்கும் இதன் கதையை எழுதிய ஏ.ரகுநாதனே பிரதான பாத்திரத்தில் நாதஸ்வரக்கலைஞராக நடித்தார். திரைக்கதை வசனங்களை பேராதனை ஜுனைதீன் எழுதினார். நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா) நடித்தார். துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ். என். தனரத்தினம், கே. ஏ. ஜவாஹர், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, சுப்புலட்சுமி காசிநாதன், ஜெயதேவி, பிரான்சிஸ் ஜெனம், வி.சிவபாலன், ஹரிதாஸ், சுதுமலை தம்பிராச, நெயினார், றெமீசியஸ், தேவராஜா போன்ற பலர் நடித்திருந்தனர். பல தென்னிந்திய இயக்குநர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குநர் வில்பிரட் சில்வா இயக்குநராகப் பணியாற்றினார். இவரோடு இணை இயக்குநராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். எம். கே. ரொக்சாமி, கண்ணன், நேசம் தியாகராசா மூவரும் இசையமைப்பளர்களாக நியமிக்கப்பட்டனர். வீரமணி ஐயர், அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை, சிறீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், நிறைய தமிழ், சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றிய மன்னாரைச் சேர்ந்த எம்.ஏ.கபூர் ஆவார். (from Wikipedia, CC BY-SA)
More like this
Naan Ungal Thozhan (1978)
நீலக்கடலின் ஓரத்திலே (1979)
Gehenu Lamai (1978)
Vaadai Kaatru (1978)
மேளதாளங்கள் (1978)
Kaatrinile Varum Geetham (1978)
Thanga Rangan (1978)
Anuragam (1978)- More like this film, on a shelf you can walk up to.It's the lit case on the top shelf.